மேட்டுப்பாளையத்தில் கனமழை, சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்

கனமழை காரணமாக தடுப்பணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் போல் கிராம சாலைகளை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.;

Update: 2023-11-23 15:21 GMT

கனமழை காரணமாக சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. இரவு விடிய, விடிய மழை பெய்தது. மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் மழை கொட்டித்தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 37.3 சென்டிமீட்டர் மழை பதிவானது. மழை காரணமாக காரமடை ஒன்றியத்தில் உள்ள மேட்டுப்பாளையம் உள்பட 193 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

சிக்காரம்பாளையம் கண்ணார்பாளையம், கருப்பராயன் நகர், பெள்ளாதி, சென்னம்பாளையம், பட்டக்காரனூர், ஏழுஎருமை பள்ளம் ஆகிய தடுப்பணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் போல் கிராம சாலைகளை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் அங்கு உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகி வருகின்றன.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. இரவு விடிய, விடிய மழை பெய்தது.

கெம்மாரம்பாளையம், கண்டியூர் கிராமத்தில் வசிக்கும் ரங்கசாமி என்பவரின் குடியிருப்பு, கனமழை காரணமாக இடிந்து விழுந்து முற்றிலும் சேதம் அடைந்தது.

மேட்டுப்பாளையம்-குன்னூர், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் 5-க்கு மேற்பட்ட இடங்களில் தற்போது மண்சரிவு ஏற்பட்டு, சாலையோர மரங்கள் ரோட்டில் விழுந்து கிடக்கின்றன. அவற்றை அகற்றும் பணியில் மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் வருமாறு (மில்லிமீட்டரில்):

அன்னூர்-12.40, மேட்டுப்பாளையம்-373, சின்கோனா-23, சின்னக்கல்லார்-26, வால்பாறை-28, வால்பாறை தாலுகா-27, சோலையாறு-15, ஆழியாறு-15.60, சூலூர்-0, பொள்ளாச்சி-17.40, கோவை தெற்கு-10.50, பீளமேடு விமானநிலையம்-14.80, தமிழ்நாடு விவசாய கல்லூரி-61.80, பெரியநாயக்கன்பா ளையம்-93.80, பில்லூர் அணைக்கட்டு-78, வாரப்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகம்-0, தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம்-46, சிறுவாணி அடிவாரம்-99, மதுக்கரை தாலுகா-15, போத்தனூர் ரெயில் நிலையம்-17, மக்கினாம்பட்டி-6, கிணத்துக்கடவு தாலுகா-12, ஆனைமலை தாலுகா-22 என மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News