கோவையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்
விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வருகிற 26-ம் தேதி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது;
Farmers Grievance Redressal Meet, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடப்பு மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வருகிற 26-நம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடக்க உள்ளது. இதில் ஆட்சியர் கிராந்திகுமார்பாடி நேரடியாக கலந்து கொண்டு விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற உள்ளார்.
விவசாயிகள் குறை தீர்க்ககும் நாள் கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரடியாக தெரிவித்திடவும் வேண்டும்
எனவே கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், இந்த கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். .குறைதீர்ப்பு கூட்டத்துக்கு வரும் விவசாயிகள், கொரோனா விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.