ஓட்டு விலை போய் விட கூடாது - மநீம தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள்
யாரும் இங்கு முழு நேரம் அரசியல்வாதியல்ல.
கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரான கமலஹாசன் தனது இறுதிகட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அப்போது பேசிய அவர், "பணத்தை முதலாக போட்டவர்கள் பணத்தைதான் தேடுவார்கள். நேர்மையை முதலாக போட்டவர்கள் நேர்மையை தேடுவார்கள். பணப்பட்டு வாடாவால் மயங்கி விட கூடாது. ஓட்டு விலை போய் விட கூடாது. ஏழைகள் பணத்தை காட்டினால் வந்து விடுவார்கள் என நினைக்கின்றனர். ஏழைகள் பணமில்லாமல் இருக்கலாம். நேர்மை இல்லாமல் இருக்க மாட்டார்கள்.
பா.ஜ.கவினர் 3 சீட்டாவது கிடைக்கும் என நினைத்து இருக்கின்றனர். அதில் ஓன்றையாவது தட்டிவிட வேண்டும். அந்த சித்தாந்தம் இங்கு எடுபடாது. என்பதை காட்ட வந்திருக்கின்றேன். இதுதான் என் வாழ்க்கை என்பதை வரலாறு முடிவு செய்து விட்டது. யாரும் இங்கு முழு நேரம் அரசியல்வாதியல்ல. நான் மட்டும் அப்படி இருக்கக் வேண்டும் என அவர்கள் ஏன் நினைக்கின்றனர். இந்த தொகுதியை முன்னோடி தொகுதியாக மாற்றுவோம். நாளை நமதே என்பதை இங்கு வந்திருக்கும் ஒவ்வொரு கண்களும் காட்டுகின்றது. நான் தியாகம் செய்ய வரவில்லை. மாற்றம் செய்ய வந்திருக்கின்றேன்" என அவர் தெரிவித்தார்.