பாஜக பதட்டம் ஏற்படுத்த முயலவில்லை - வானதி சீனிவாசன்

Update: 2021-04-01 10:45 GMT

கோவையில் பதட்டத்தை உருவாக்க பாஜக முயலவில்லை என வானதி சீனிவாசன் கூறினார்.

கோயமுத்தூர் காந்திபுரம் பகுதியில் கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தாதா சாகிப் பால்கே விருது பெறும் ரஜினிகாந்த்திற்கு பாஜக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தார்.

மைக் வேலை செய்யாததால் கமல்ஹாசன் டார்ச் லைட்டை வீசியது, அவர் பொறுமை, பக்குவம் பெறவில்லை என்பது காட்டுகிறது.கமல்ஹாசன் நீண்ட காலம் அரசியலில் பயிற்சி எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். திமுகவினர் காவல்துறை, பொதுமக்களை மிரட்டுகின்றனர் எனவும், வன்முறை அரசியலில் திமுகவினர் ஈடுபடுகின்றனர்.

கோவையில் பதட்டத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்யவில்லை எனவும், திமுக ஆட்சியில் தான் கோவையில் குண்டு வெடிப்புகள் நடைபெற்றது. அதற்காக திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். கோவையில் உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற ஊர்வலத்தின் போது செருப்புக்கடையில் கல் வீசியது சிறு சம்பவம் எனவும், அதை ஊதி பெரிதாக்குவது யார் எனக் கேட்டார்.

பெண்களை இழிவாக பேசிய உதயநிதிஸ்டாலின், திண்டுக்கல் லியோனியை திமுக கண்டித்ததா எனக் கேட்ட அவர், உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நிகழ்ச்சியில் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்காதது குறித்த கேள்விக்கு, கோவை தெற்கு நிகழ்ச்சி என்பதால் தான் அதிமுகவினர் பங்கேற்கவில்லை என பதிலளித்தார்.

Tags:    

Similar News