கோவையில் மாட்டு வண்டியில் வந்து பிரசாரம் செய்த வானதி சீனிவாசன்
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடுபவர் பா.ஜ.கவின் தேசிய மகளிர் தலைவர் வானதி சீனிவாசன். இவர் இன்று மாட்டு வண்டியில் வீதி, வீதியாக வந்து பிரசாரம் செய்தார்.;
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று கோவை ராமநாதபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். மாட்டு வண்டியில் வந்த வானதி சீனிவாசன் , அதில் அமர்ந்தபடி பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
அவருடன் ஏராளமான பா.ஜ.க மற்றும் அதிமுக தொண்டர்கள் மாட்டு வண்டியின் பின்னால் அணிவகுத்து சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தமிழ்நாடு ரேக்ளா கிளப் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.