மாவோயிஸ்ட் வீரமணி மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
கருமத்தம்பட்டி அருகே சதித்திட்டம் தீட்டியதாக மாவோயிஸ்ட்டுகள் 5 பேர் கடந்த 2015ம் ஆண்டு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.;
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே சதித்திட்டம் தீட்டியதாக மாவோயிஸ்ட்டுகள் 5 பேர் கடந்த 2015ம் ஆண்டு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் கடலூரை சேர்ந்தவர் வீரமணி (23). இதனைத் தொடர்ந்து நிபந்தனை ஜாமீனில் கடந்த 2020ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். இதனிடையே போலீசார் தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வந்து மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் வீரமணி கடந்த 2020ம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தாக தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த வீரமணி மீது உபா எனப்படும் சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் கோவை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.