வேரோடு சாய்ந்த மரம்; கோவையில் போக்குவரத்து பாதிப்பு

கோவையில் பலத்த காற்று வீசியதால் மரம் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.;

Update: 2021-07-23 10:30 GMT

சாலையில் விழுந்த மரம்.

கோவையில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசுவதுடன் லேசான மழை பெய்து வருகிறது. இன்று லேசான மழை பெய்த நிலையில், திருச்சி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே மரம் வேரோடு சாய்ந்ததது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட காரும் சிக்கி நொறுங்கியது.  அதிர்ஷடவசமாக உள்ளே யாரும் இல்லை. இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டதை தொடர்ந்து, அவசர மீட்பு ஊர்தியில் வந்த 6 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் ரம்பம் கொண்டு அரை மணி நேரத்தில் கிளைகளை வெட்டி அப்புறபடுத்தினர்.

மரம் விழுந்ததின் காரணமாக சிறுதி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News