கோவை மாவட்டத்தில் இன்று 756 பேருக்கு பெருந்தொற்று: 12 பேர் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 756 பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது; 12 பேர் உயிரிழந்துள்ளனர்.;

Update: 2021-06-24 14:19 GMT

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதேசமயம் கோவையில் மே மாதத்தில் ஏறுமுகத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்புகள், ஜூன் மாதத்தில் குறைந்து வருகிறது. 

கோவை மாவட்டத்தில் இன்று 756 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 15 ஆயிரத்து 808 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 7248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 1151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 6 ஆயிரத்து 592 பேராக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்றால் இன்று 12 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1968 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News