தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதால், குண்டர் தடுப்புச் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.;
குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முஜிபூர் ரகுமான்.
கோவை ராமநாதபுரம் பெருமாள் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரிடம் கோவை அரசு மருத்துவமனை முன்பு ஒரு நபர் கத்தியை காட்டி மிரட்டி 2 ஆயிரம் ரூபாய் பணம் பறித்ததாக, பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த முஜிபூர் ரகுமான் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இவர் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதால், குண்டர் தடுப்புச் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள பந்தயசாலை காவல் ஆய்வாளர் சுஜாதா பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையின் பேரில் கோவை மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம் தமோதர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ஒராண்டிற்கு பிணையில் வர முடியாத தடுப்புக் காவல் ஆணை சிறையில் உள்ள முஜிபுர் ரகுமானுக்கு வழங்கப்பட்டது.