பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்எப்ஐ ஆர்ப்பாட்டம்
தனியார் பள்ளி கல்லூரி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு 20க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தனியார் பள்ளி கல்லூரி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசு பள்ளி கல்லூரிகளில் சுகாதார வசதியை மேம்படுத்தி மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் தினம்தோறும் மாஸ்க் கிருமிநாசினி நோய் எதிர்ப்புசக்தி உணவுகளை வழங்கிட வேண்டும் எனவும், கல்வி நிலையங்களை முழுமையாக பாதுகாப்பு வசதிகளோடு திறக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியதை உறுதிப்படுத்த வேண்டும். முழுமையான பாதுகாப்பு வசதியுடன் விடுதிகள் திறப்பை உறுதிப்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் ஆர்எஸ்எஸ், பிஜேபியை சேர்ந்த நபர்களை நியமிப்பதை தடுக்க வேண்டும் எனவும், அகஸ்தியா பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்திற்கு பள்ளிக்கல்வித்துறை கல்வி கற்பிக்க கொடுத்திருக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.