கொங்கு மண்டலத்தை வழி நடத்த வாரீர்: சசிகலாவை ஆதரித்து கோவையில் போஸ்டர்

கோவை மாநகரில், கொங்கு மண்டலத்தை தலைமை ஏற்க வாருன்க்கள் எனம் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு உண்டானது.;

Update: 2021-07-21 12:42 GMT

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து, ஒட்டப்பட்டுள்ள  போஸ்டர்கள்.

கோவையை சுற்றி ஏற்கனவே கொங்குநாடு குறித்த சர்ச்சைகள் சுற்றி வரும் நிலையில், தற்போது சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து, மாநகரின் பல இடங்களில் அமமுகவினர் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். அதில், கொங்கு மண்டலத்திற்கு தலைமை ஏற்க வாரீர் என்று, சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தியாகத் தலைவி சின்னம்மா கொங்கு மண்டலத்தை வழி நடத்த வாருங்கள் என்ற வாசகத்துடன் போஸ்டர்கள்  நகர் முழுவதும் கண்ணில் படும்படி ஒட்டப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும்  அதிமுக வெற்றியடைந்த சூழலில் தற்போது சசிகலா படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஏற்கனவே, அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா செல்போனில் பேசி வரும் நிலையில், தற்போது போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவதால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில், இது  சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News