பெட்ரோல், டீசல் விலை உயர்வு: டூவிலருக்கு இறுதிச் சடங்கு
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் டூவிலருக்கு இறுதிச் சடங்கு செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்;
நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலையானது உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசலின் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை எட்டியுள்ளது. இதனை குறைக்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பெட்ரோல் டீசல் விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தி, இரு சக்கர வாகனங்களுக்கு இறுதி சடங்கு நடத்துவது போன்று மலர் வளையம் வைத்தும் சங்கு ஊதியும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை ஒன்றிய குறைக்க வேண்டும் என்றும், பேரிடர் காலத்தில் மக்களை வதைக்க வேண்டாம் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.