விநாயகர் சதுர்த்திக்கு கோவில்களை திறக்க கோரி சிவபெருமாள் வேடமணிந்து மனு
சிவ பெருமாள் வேடமணிந்து வந்து இந்து மக்கள் புரட்சி படை நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.;
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிவபெருமாள் வேடமணிந்து வந்து இந்து மக்கள் புரட்சி படை நிர்வாகிகள் மனு அளித்தனர். வருகின்ற செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வர இருப்பதால், இந்து சமய அனைத்து திருக்கோயில்களும் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு எவ்வித தடையுமின்றி வழிபட அனுமதி தரக்கோரி மனு அளித்தனர். கடந்த ஒன்றரை ஆண்டாக கொரோனா நோய் தொற்று உலகத்தை ஆட்டிவைக்கும் கொடிய நோயாகவும், மக்களை வாட்டி வதைத்த இந்த வேளையில், தற்போது கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.