டூவீலருக்கு பாடை கட்டி போராட்டம் - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு

பெட்ரோல், டீசல் விலையினை குறைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-06-11 06:15 GMT

எரிபொருள் விலையுயர்வை கண்டித்து கோவையில் காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை அண்ணா சிலை சிக்னல் அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.


இரு சக்கர வாகனத்தை பாடை கட்டி தூக்கி வந்த காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலையினை குறைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல கோவை நகரில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Tags:    

Similar News