கமல்ஹாசன் மகள் நடனமாடி வாக்கு சேகரிப்பு

Update: 2021-04-04 06:30 GMT

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனின் மகள் அக்சராஹாசன் மற்றும் சுஹாசினி ஆகியோர் நடனமாடி வாக்குகள் சேகரித்தனர்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நடிகை சுஹாசினி உள்ளிட்ட திரை பிரபலங்கள் அவரது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா அவருடன் பயணித்து வந்தாலும் நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று நடிகைகள் சுகாசினியும், அக்ஷரா ஹாசனும் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அம்மன்குளம், காந்திபுரம், ராம்நகர் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று டார்ச்லைட் சின்னத்தில் வாக்களிக்கும்படி பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இருவரும் நடனமாடி வாக்கு சேகரித்தது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

Tags:    

Similar News