கோவையில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்
வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு சரி பார்க்கும் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.;
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்ட மன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் 1085 வாக்குச்சாவடி மையக்களும், 4427 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்கு சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு சரி பார்க்கும் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க பயன்படுத்தும் சக்கர நாற்காலி உள்ளிட்ட தேர்தல் நடத்த தேவையான பொருட்கள் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 5316 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5894 வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரங்களும் அனுப்பப்படுகின்றன. தொகுதி வாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு மையத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.