பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு: திருவோடு ஏந்தி போராட்டம்

லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு.;

Update: 2021-09-03 10:00 GMT

திருவோடு ஏந்தி திராவிடத் தமிழர் கட்சியினர் போராட்டம்.

மத்திய அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறது. லாபத்தில் இயங்கும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திராவிடத்தமிழர் கட்சியினர் கையில் திருவோடு ஏந்தியவாறு போராட்டம் நடத்தினர். அரசுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வந்தால் எதிர்காலத்தில் அனைவரும் திருவோடுதான் எந்த வேண்டும் எனவும், தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் எனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News