கோவையை கலவர ஸ்பெசலிஸ்டுகளிடம் இருந்து பறித்து எடுக்க வேண்டும் - கமல்ஹாசன்

கோவையை கலவர ஸ்பெசலிஸ்டுகளிடம் இருந்து பறித்து எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Update: 2021-04-01 13:30 GMT

கோவை காட்டூர் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், தன்னுடைய வாழ்க்கை திறந்த புத்தகம். அது அப்படியாகவே இருக்கும் எனத் தெரிவித்தார். தன்னுடைய அரசியல் வாழ்க்கையில், என்னுடைய பிறப்பிடம் கோவை தெற்காக அமைந்துள்ளது எனவும், பிறந்த வீட்டை பாதுகாப்பது போன்று இத்தொகுதியை பாதுகாப்பேன் எனவும் அவர் கூறினார்.

234 தொகுதிகளில் இத்தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவேன் எனவும், 19 வார்டுகளிலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும் , அதை செய்யும் முதல் கட்சியாக மநீம இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

40 வருடங்களாக நற்பணிகளை செய்து வருகிறேன் எனவும், சினிமா டிக்கெட் விற்பனைக்கும், நற்பணி இயக்கங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

நாங்கள் செய்த இரத்த தானங்கள் மூலம் சில குளங்களை நிரப்ப முடியும் எனவும், நான் காந்தியின் பி டீம் எனவும் அவர் தெரிவித்தார். மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக நாம் இருக்ல வேண்டும் எனவும், கலவர ஸ்பெசலிஸ்டுகளிடம் இருந்து கோவை பறித்து எடுக்க வேண்டும் எனவும் கூறியனார்,

எந்த சக்தி இருக்க வேண்டும், எது இருக்க கூடாது முடிவு செய்யுங்கள் எனத் தெரிவித்தார். மேலும் கலவர ஸ்பெசலிஸ்ட்டுக்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள் எனவும், மக்கள் சமூக நல்லினக்கத்தை விரும்புகிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

40 வருடத்தில் செய்யாததை 4 வருடத்தில் செய்து முடிப்பேன் எனவும், இந்த களத்தின் வாயிலாக நல்ல தலைவர்களை உருவாக்கும் விதையை விதைத்து வருகிறேன் எனவும் அவர் கூறினார். ஊழலில் இருந்து விடுதலை பெற வேண்டும் எனவும், ஊழலை ஒழித்தால் தான் ஏழ்மை ஒழியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News