கோவையில் எய்ம்ஸ்: முதலமைச்சரின் கோரிக்கைக்கு கோவை எம்.பி. வரவேற்பு

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதற்கு, கோவை எம்.பி. நடராஜன் வரவேற்றுள்ளார்.;

Update: 2021-06-18 13:28 GMT

இதுகுறித்து, கோவை எம்.பி. நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: மருத்துவ கேந்திரமான கோவை மாவட்டத்திற்கு, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்த சூழலில், பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்கிற வலியுறுத்தி இருப்பது முக்கியமானது. இது,  வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதனை கோவை மாவட்ட மக்களின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக துவக்க வேண்டும். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்கிற தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையின் நியாயத்தை மத்திய அரசு உணர்ந்து,  உடனடியாக ஒப்புதலை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறன், என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News