உலக ரத்த கொடையாளர்கள் தினம்: கோவை ஆட்சியர் உள்ளிட்டவர்கள் ரத்ததானம்

தொற்று காலத்தில் ரத்த தானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடந்த சிறப்பு முகாமில், கோவை கலெக்டர் ரத்ததானம் செய்தார்.

Update: 2021-06-14 13:48 GMT

கோவை ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்ட உயரதிகாரிகள் இரத்த தானம் அளித்தனர்.

குருதி பிரிவுகளை கண்டறிந்த காரல் லாண்ஸ்டெய்னரின் பிறந்தநாளான ஜூன் 14 ம் தேதியான இன்று, ரத்த கொடையாளர் தினமாக உலக சுகாதார நிறுவனம்,  2005 முதல் அனுசரித்து வருகிறது. அவ்வகையில் ரத்த கொடையாளர்கள் தினம் இன்று அனுசரிக்கபடுகிறது.

இதனையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. கொரோனா நோய் தொற்று காலத்தில் ரத்ததானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக,  சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல்துறை ஆணையர் தீபக் எம்.தமோர், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கோவை சரக டி.ஜ.ஜி முத்துசாமி, மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் ரத்த தானம் செய்தனர்.

Tags:    

Similar News