பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

கோவை கலெக்டர் அலுவலகம் எதிரே மருத்துவமனை ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-05-17 05:45 GMT

கோவை அரசு மருத்துவமனையில் 100 க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 40க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தற்போது அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கோவை அரசு மருத்துவமனையில் அனைத்துவிதமான துப்புரவுப் பணிகளையும் செய்து வருவதாகவும், தங்களுக்கு எந்த சலுகைகளும் இல்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.

தமிழக முதல்வர் தங்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அருகில் அமர வைத்தனர்.

பின்னர் துப்புரவு பணியாளர்களின் கோரிக்கை குறித்த மனுவை அரசு அதிகாரிகளிடம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாகவும், கோரிக்கைகளை மனுவாக அரசு அதிகாரிகளிடம் அளிக்கும்படியும் காவல்துறையினர் அறிவுறுத்தினார். இதனையடுத்து கோரிக்கை மனுவினை அதிகாரிகளிடம் வழங்கிய துப்புரவு பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

#தமிழ்நாடு #கோயமுத்தூர் #துப்புரவு #கலெக்டர் #பணியாளர்கள் #பணிநிரந்தரம்செய்யகோரி #Instanews #tamilnadu #இன்ஸ்டாசெய்தி #அரசுமருத்துவமனை #Demand #struggle #cleaningstaff #permanenceofwork #workContract #staffstruggle #work #employee

Tags:    

Similar News