அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறதா? பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்

உள்ளாட்சித் தேர்தலில் தற்போதைய கூட்டணி தொடர்கிறதா என்பதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.;

Update: 2021-09-19 15:45 GMT

கோவையில், அண்ணாமலை முன்னிலையில், பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள, பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது: கோவையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு மக்கள் சேவைகள் நடைபெற்று வருகிறது. கோவை மாநகர காவல்துறையினர், திமுகவின் கூலிப்படையாக இருந்து,   மோடியின் பிறந்தநாள் போஸ்டரை கிழித்ததற்கு பாஜக வின் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் உயிரிழக்கும் நிலைக்கு,  பாஜக மிகவும் வருத்தப்படுகிறது. நீட் என்பது சமூக நீதியை நிலைநாட்ட கூடிய தேர்வாக உள்ளது. அரசியல் காரணங்களுக்காக, நீட் தேர்வை திமுக தவறாக பயன்படுத்துகிறது. 2021 ல் மட்டும் ஏன் மாணவர்கள் இறக்க வேண்டும். நீட் தேர்வில் மட்டும் அல்லாமல் மற்ற படிப்புகளிலும் முறைகேடு நடக்கிறது.

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் தற்போதைய கூட்டணி சுமூக செல்கிறது. வரும் 22 ஆம் தேதிக்குள் இடங்கள் முடிவு செய்யப்படும். மேலும் பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. பெட்ரோல் டீசல் விலையை கட்டிப்பாட்டிற்குள் கொண்டுவர, மாநில அரசு ஜி எஸ் டி வரிக்குள் கொண்டுவர ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்றார். உள்ளாட்சி தேர்தலை ஒரே தேதியில் நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதில் எந்த தவறும் இல்லை. மாதம் ஒரு முன்னாள் அமைச்சரின் வீடுகளில் லஞ்ச சோதனை என்பது, திமுக-வின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று, அண்ணாமலை தெரிவித்தார். 

Tags:    

Similar News