கோவை திமுக- தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட பொறுப்பாளர் நியமனம்

கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் நீக்கப்பட்டு புதிய மாவட்ட பொறுப்பாளராக டாக்டர்.கி.வரதராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-06-29 05:39 GMT

கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் திடீர் நீக்கப்பட்டு புதிய மாவட்ட திமுக பொறுப்பாளராக டாக்டர்.கி.வரதராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்ட தென்றல் செல்வராஜ் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக டாக்டர் வரதராஜன் கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் என கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்


Tags:    

Similar News