நடிகர் ராதாரவி மீது வழக்குப்பதிவு : பெண்களை இழிவுபடுத்தியதாக புகார்
கமல்ஹாசன் குறித்து விமர்சிக்கும் போது பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் ராதாரவி பேசியதால் வழக்கு
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, கடந்த வாரம் பாஜகவை சேர்ந்த நடிகர் ராதாரவி பரப்புரை செய்தார். அப்போது நடிகர் கமலஹாசன் குறித்து பேசும் போது பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் ராதாரவி பேசியிருந்தார்.
அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் தேர்தல் அதிகாரி சிவசுப்பிரமணியன் பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ராதாரவி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.