கோவையில் இன்று 219 பேருக்கு கொரோனா தொற்று
கோவை மாவட்டத்தில் இன்று புதிதாக 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. கோவையில் இன்று 219 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.
இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 29 ஆயிரத்து 804 உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2008 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
இன்று கொரோனா தொற்றில் இருந்து 174 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 25 ஆயிரத்து 618 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் நீண்ட நாட்களுக்கு பிறகு, இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2178 ஆக உள்ளது.