கோவை மாவட்டத்தில் 137 வேட்பு மனுக்கள் ஏற்பு

கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட 317 வேட்பு மனுக்களில் 137 வேட்பு மனுக்கள் ஏற்பு.

Update: 2021-03-20 13:15 GMT

கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 317 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

கோவை தெற்கு தொகுதியில் மநீம தலைவர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இதேபோல முக்கிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

பத்து தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 137 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதிகபட்சமாக கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு தொகுதிகளில் 21 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. குறைந்தபட்சமாக வால்பாறையில் 6 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

317 வேட்பு மனுக்களில் 180 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

Tags:    

Similar News