கோவையில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார்.

Update: 2021-09-05 07:00 GMT

விருது பெற்ற ஆசிரியர்களுடன் ஆட்சியர் சமீரன்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தமிழகம் முழுவதும் சிறந்து விளங்கிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதில் கோவை மாவட்டத்தில் மொத்தம் 13 ஆசிரியர்கள் இந்த விருதை பெற தேர்வாகினர்.

பொள்ளாச்சி பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பாலமுருகன், குரும்பப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் விஜயராகவன், ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி பிராங்கிளின், அமானுல்லா, முதுகலை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒண்டிப்புதூர், இந்திரா, தலைமை ஆசிரியை, நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம். லிட்வின், பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஒத்தக்கால் மண்டபம்.

ரஞ்சிதம், இடைநிலை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நாகமநாயக்கன் பாளையம், சூலூர். சத்ய பிரபாதேவி, பட்டதாரி ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆறுமுககவுண்டன் புதூர். சுகுணா தேவி, பட்டதாரி ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, ஒன்னிபாளையம், பிரஸ் காலனி. மகாலட்சுமி தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கல்வீரம்பாளையம். கீதா, பட்டதாரி ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஏரிப்பட்டி. மரகதம், தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செஞ்சேரி. மரியஜோசப், முதல்வர், புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒண்டிப்புதூர் ஆகிய 13 பேருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார்.

Tags:    

Similar News