100 % வாக்குப்பதிவு: குதிரை வண்டி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்
100 சதவீதம் வாக்குபதிவு செய்ய தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் 100 சதவீதம் வாக்குபதிவு செய்ய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு சார்பில் மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் குதிரை வண்டி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர் துவக்கி வைத்தார்.
கோவையில் உள்ள 4 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் பொதுமக்கள் 100 சதவீதம் தங்கள் வாக்குகளை நேர்மையாக செலுத்த வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதற்காக 3 குதிரை வண்டிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் ஒட்டி, தேர்தல் தொடர்பான தொப்பி அணிவிக்கப்பட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.