வரும் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் 100 சதவீதம் வெற்றி நிச்சயம் என பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த முறை தோல்வி அடைந்து இருந்தாலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு சேர்த்து இருக்கின்றேன். கோவை தெற்கு தொகுதியில் நிச்சயமாக 100 சதவீதம் பா.ஜ.க வசமாக போகின்றது.
மே 2 ம் தேதிக்கு பின் பிக்பாஸ் அல்லது புதிய படத்தில் நடிக்க கமல் போகலாம். சிஏஏ குறித்து அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு இருப்பது குறித்து, அதிமுக தலைவர்களுடன் சாதக, பாதகங்கள் குறித்து உட்கார்ந்து பேசுவோம். என்னுடைய சொத்து மதிப்பு உயர காரணம் மூதாதையர் குடும்ப சொத்தில் பாகப்பிரிவினை வந்தது. இதை தவிர நல்ல வழக்குகள் என்னிடமும், என் கணவரிடமும் இருக்கின்றது. வருவாயும் இருக்கின்றது. கடந்த முறை சிறுபான்மை மக்கள் வாக்களித்து இருக்கின்றனர் என தெரிவித்தார்.