கோவையில் 204 பேருக்கு கொரோனா தொற்று: 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது
நேற்றைய தினத்தை விட இன்று 5 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது.;
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக தொற்று பாதிப்புகள் நீடித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
நேற்றைய தினத்தை விட இன்று 5 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 204 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால், கோவை மாவட்டத்தில் இதுவரை, கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2648 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 328 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 22 ஆயிரத்து 495 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 5 பேர் உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2140 ஆக உள்ளது.