அரசியல் கூட்டங்களில் மாஸ்க் கட்டாயம்- கோவை கலெக்டர்

Update: 2021-03-17 08:30 GMT

அரசியல் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என கோயமுத்தூர் கலெக்டர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளின் ஒரு பகுதியாக பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டியும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தியும், கோவை கலெக்டர் இராசாமணி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் குமரவேல்பாண்டியன் ஆகியோர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இன்று விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கி பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கலெக்டர் ராசாமணி, மக்களின் கவனக்குறைவு காரணமாக மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். நேற்று மட்டும் 80க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என கூறினார். கடந்த ஒரு வாரத்தில் நாளொன்றுக்கு 40 பேருக்கு கூடுதலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் கொரோனா தொற்று இல்லை என்ற மன நிலையோடு பொதுமக்கள் வெளியே வருவதாகவும் அரசியல் நிகழ்ச்சிகள்,திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் யாரும் மாஸ்க் அணிவது இல்லை என்றவர் இதே நிலை தொடர்ந்தால், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் சூழல் உள்ளது என்றார்.

கொரோனா தடுப்பு குறித்த விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம் இனி மாஸ்க் அணியாமல் பிரச்சாரங்களில், பொதுகூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.இந்நிலையில் மாநகர பஸ் ஸ்டாண்டில் மாஸ்க் அணியாத தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News