கோவையில் பாஜக பிரச்சாரம் துவங்கியது
கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து சிவானந்த மில்ஸ் வரை 400 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் பாஜகவினர் பேரணியாக சென்றனர்.;
சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் முனைப்பு காட்டி வருகின்றன. அதிமுக பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யபடாத நிலையில், கோவையில் பாஜகவினர் தேர்தல் பரப்புரையை துவக்கி உள்ளனர். கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து சிவானந்த மில்ஸ் வரை 400 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர். பா.ஜ.க கொடி மற்றும் நமது சின்னம் தாமரை ஆகிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியை பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான கெளதமி துவங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கெளதமி, தேர்தல் பரப்புரையை துவக்கியிருப்பது பொன்னான எதிர்காலத்திற்கான முதற்படி எனத் தெரிவித்தார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு அருமையான வெற்றி கிடைக்கும் எனவும், கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிய நேரம் எடுத்தாலும், விரைவில் முடிவு எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.