கோவையில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்

Update: 2021-02-08 05:30 GMT

கோயமுத்தூரில் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனிடையே இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 9 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்கப்படுமென அரசு அறிவித்து இருந்தது.

இதன்படி இன்று கோவை மாவட்டத்தில் 594 பள்ளிகளில் 9 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கப்பட்டன. இதையொட்டி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணியவும், தனிமனித இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டனர். மாணவர்களின் உடல் வெப்ப நிலை சோதிக்கப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.கிட்டத்திட்ட 11 மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வந்திருப்பதும், நண்பர்களை சந்திப்பதும் மகிழ்ச்சியளிப்பதாகவும், பாடங்களில் உள்ள சந்தேகங்களை தீர்க்கவும், தேர்வுக்கு தயாராகவும் உதவிகரமாக இருக்குமெனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News