கோவையில் மார்க்சிஸ்ட் சார்பில் 500 பேருக்கு மளிகை பொருட்கள் வழங்கல்

கோவை ரத்தினபுரி பகுதியில் 500 பேருக்கு, மளிகை மற்றும் காய்கறி தொகுப்புகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழங்கப்பட்டது.;

Update: 2021-06-12 15:39 GMT

கோவையில், கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கிய மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள்

பெருந்தொற்று காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. முறைசாரா தொழில் உள்ளிட்ட எதுவும் இயங்கவில்லை. இதனால் சாதாரண ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினர் வருவாயின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ரத்தினபுரி மகளிர் கூட்டமைப்பு சார்பில், ரத்தினபுரி பகுதியில் மளிகை மற்றும் காய்கறி தொகுப்புகள், சுமார் ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், பெண்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார்.

Tags:    

Similar News