கோவையில் 290பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு இல்லை

கோவையில் இன்று, 290 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று உயிரிழப்பு இல்லை.;

Update: 2021-07-12 15:45 GMT

கொரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தில் இன்று தினசரி பாதிப்பு 300 க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில்,  290 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 25 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 3905 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 392 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 19 ஆயிரத்து 322 பேராக உயர்ந்துள்ளது.

கோவையில் ஆறுதல் அளிக்கும் செய்தியாக, கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று உயிரிழப்புகள் ஏற்படாதது, நம்பிக்கையை தந்துள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2107 ஆக உள்ளது. 

Tags:    

Similar News