கோவையில் இன்று 208 பேருக்கு கொரோனா தொற்று - 4 பேர் பலி: சுகாதாரத்துறை தகவல்
கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 30 ஆயிரத்து 12 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் மீண்டும் தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. கோவையில் இன்று 208 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 30 ஆயிரத்து 12 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 169 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 25 ஆயிரத்து 787 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 4 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2182 ஆக உள்ளது.