கோவையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு
கோவை மாநகராட்சியில் 602 இடங்களும், புறநகரில் 288 இடங்களும் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாவட்ட நிரவாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் 602 இடங்களும், புறநகரில் 288 இடங்களும் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாவட்ட நிரவாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்ததுள்ளது. மாநிலத்தில் சென்னையை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தது கோவை பிடித்துள்ளது. கோவையில் இதுவரைக்கும் 890 கட்டுப்பாட்டு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கொரோனாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் நேற்று மட்டும் 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.
மேலும் தனிமைப்பட்ட பகுதிகளை கண்காணிப்பதற்கு மாநகராட்சி மற்றும் போலீசார் சார்பிலும் பாதுகாப்பு பணியிலும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வெளியில் சுற்றினால் அவர்களை அறிவுரை வழங்கி உள்ளே அனுப்புவதற்கும் அதையும் மீறி வெளியே சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.