கோவையில் 436 பேருக்கு கொரோனா தொற்று ; 7 பேர் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் இன்று, 436 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; இன்று மட்டும் மாவட்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-07-05 14:45 GMT

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. கோவையில் இன்று 436 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 22 ஆயிரத்து 20 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை 2992 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 457 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 16 ஆயிரத்து 952 பேராக உயர்ந்துள்ளது.

இன்று கோவையில் மற்ற மாவட்டங்களை விட அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் இன்று 7 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2076 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News