வேளாண் நிதி நிலை அறிக்கை கருத்து கேட்பு: 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு

கோவையில் நடந்த வேளாண் நிதிநிலை அறிக்கை, தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Update: 2021-07-28 13:18 GMT

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட வேளாண்மைத் தொழில்நுட்பங்களை, அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

கோவை மண்டல விவசாயிகளுடன் வேளாண் துறைக்கு தனிநிதி அறிக்கை தயாரித்தல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்,  தமிழ்நாடு வேளான் பல்கலைகழக அரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கத்தினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், 2021-2022ம் ஆண்டு வேளாண் தனிநிதி நிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பான கருத்துகளை விவசாயிகளிடம். அமைச்சர் கேட்டறிந்தார். தொடர்ந்து,  பல்கலையில் உள்ள நூற்றாண்டு கட்டிடத்தை பார்வையிட்டு,  மரக்கன்று நட்டு வைத்தார். பின்னர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிகள் மற்றும் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட வேளாண்மைத் தொழில்நுட்பங்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து, பல்கலைக்கழக பழத்தோட்டத்தில், ஆளில்லா விமானம் மூலம் பயிர் வளர்ச்சியூக்கிகள் மற்றும் பூச்சி மருந்து தெளித்தல் பற்றிய செயல் விளக்கத்தினை அவர் பார்வையிட்டார். முன்னதாக அரசு சார்பில் மானியமாக ஐந்து லட்சம் மதிப்பில் பண்ணை இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார். இந்த ஆய்வின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பல்கலைகழக துணைவேந்தர் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News