கோவையில் இன்று 226 பேருக்கு கொரோனா தொற்று: 3 பேர் உயிரிழப்பு

கோவையில் கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது.

Update: 2021-08-04 14:30 GMT

கொரோனா பரிசோதனை (பைல் படம்)

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்புகள், கடந்த வாரத்தில் திடீரென ஏறுமுகத்திற்கு சென்றது. இதனால் கோவையில் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 18 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவையில் இன்று 226 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து 241 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2085 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 971 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2185 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News