கோவையில் பட்டப்பகலில் 20 பவுன் நகை கொள்ளை

Update: 2021-01-20 11:45 GMT

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து பட்டப்பகலில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயமுத்தூர் ரத்தினபுரி பகுதியில் வசிப்பவர் நாகராஜ் (38). இவர் பிளக்ஸ் போர்டு காண்ட்ராக்ட் பணி செய்து வருகிறார். அவர் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு அவரும் அவரது மனைவியும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்ததில் மர்மநபர்கள் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த சுமார் 20 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News