கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் தேதி சந்திரசேகர் தனது முகநூல் பக்கத்தில் திமுக வேட்பாளர்களுக்கு கொலை மிரட்டல் விடும் வகையில் ஒரு காணொலியை பதிவு செய்தார். அதில் திமுக வேட்பாளர்கள் ஆடுகள் எனவும், நாங்கள் வெற்றி பெற்று கொண்டாடும் போது அந்த ஆடுகளை வெட்டி பிரியாணி செய்து அனுப்பி வைப்போம் என பேசியது பதிவாகியிருந்தது. இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர். இதன்பேரில் சந்திரசேகர் மீது வடவள்ளி போலீசார் கொலை மிரட்டல், தகாத வார்த்தைகளில் பேசுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.