கோவை உக்கடத்தில் கோவிலில் தங்கக்காசு திருடிய மூவர் கைது
கோவையில், கோவிலில் இருந்து வெள்ளி வாள், தங்கக்காசுகள் உள்ளிட்டவற்றை திருடிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
கோவை உக்கடம் அருகேயுள்ள மதுரை வீரன் கோவிலில், கடந்த 22ம் தேதி இரவு, நள்ளிரவில் பூட்டை உடைத்து கோவிலில் இருந்த சுவாமியின் வாள் மற்றும் 4 தங்கக்காசுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், கோவிலில் திருடிய நவீன், விக்கி, பிரகாஷ் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து வாள் மற்றும் 4 கிராம் தங்கக்காசுகளை மீட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூவரும் கடைகளில் விலையுயர்ந்த வயர்களையும் திருடியது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்துள்ள போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.