ஊருக்குள் புகுந்த காட்டெருமையை மயக்க ஊசி போட்டு பிடித்த வனத்துறையினர்
ஊருக்குள் வந்த காட்டெருமை 3 நாட்கள் போராட்டத்திற்கு பின் சூலூர் அருகே வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்தனர்;
வனபகுதியில் இருந்து கௌசிகா நதி வழியாக வந்த காட்டெருமை 3 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு சூலூர் அருகே வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து வனப்பகுதியில் விட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள கௌசிகா நதி வழியாக காட்டெருமை ஒன்று வழி தவறி ஊருக்குள் புகுந்தது இந்நிலையில் நேற்று சரவணம்பட்டி பகுதியில் சுற்றித் திரிவதாக கோவை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சரவணம்பட்டி பகுதியில் இருந்த காட்டெருமையை பிடிப்பதற்காக நேற்று வனத்துறையினர் முயற்சி செய்தனர் அந்த முயற்சியில் இருந்து தப்பித்த காட்டெருமை 40 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து சூலூர் அருகே உள்ள மைலம்பட்டி பகுதியில் சந்திரசேகர் என்பவரின் வீட்டின் முன்பாக உள்ள காலி இடத்திற்கு வந்தபோது வனத்துறையினர் அதனை சுற்றி வளைத்தனர்.
பின்னர் காட்டெருமை வெளியேற முடியாமல் அங்கேயே புதருக்குள் பதுங்கிக் கொண்டது. பின்னர் வனத்துறை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தியதில் அடுத்த ஐந்து நிமிடத்தில் மயங்கிய காட்டெருமையை வனத்துறை வண்டியில் ஏற்றி தடாகம் வனப்பகுதிக்கு எடுத்து சென்றனர்.