யானைக்கு சிகிச்சை அளிப்பதில் தமிழக - கேரள வனத்துறையினர் குழப்பம்

Kerala Forest Department- யானைக்கு சிகிச்சை அளிப்பதில் தமிழக - கேரள வனத்துறையினர் இடையே குழப்பம் நிலவி வருகிறது.

Update: 2022-08-16 05:33 GMT

கோவை அருகே எல்லைப்பிரச்சினையால் சிக்கி தவிக்கும் யானை.

Kerala Forest Department- கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ளது 70% வனப்பகுதி கொண்ட ஆணைகட்டியில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு வைக்கும் ஆனைகட்டி வனப்பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும். இந்நிலையில் ஆனைகட்டி அருகே உள்ள பட்டிசாலை பகுதியில் தமிழக கேரள மாநிலங்களை பிரிக்கும் கொடுங்கரை ஆற்றின் நடுவே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோர்வுடன் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நின்று கொண்டிருக்கிறது. நேற்று மாலை முதல் இந்த யானை ஆற்றில் நின்று கொண்டு இருப்பதால் இதற்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினர் யோசனை செய்து வருகின்றனர். அதே சமயம் கேரளா வனப்பகுதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் கேரள வனத்துறையும் தமிழக வனப்பகுதிக்குள் வந்துவிடாமல் தடுக்கும் வகையில் தமிழக வனத்துறையினரும் நிற்பதால் யானை எந்த பகுதிக்கு செல்வது என தெரியாமல் ஆற்றின் நடுவில் பல மணி நேரமாக நின்று கொண்டிருந்தது.

இது குறித்து சூழலில் ஆர்வலர்கள் கூறுகையில் உடனடியாக தமிழக வனத்துறையினர் இந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் கேரள வனத்துறையினர் நேற்று முதல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர். அவர்கள் யானைக்கு சிகிச்சை அளிப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் யானையை காப்பாற்ற தமிழக வனத்துறையினர் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கமாக காவல்துறையில் எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில் வனத்துறையில் எல்லை பிரச்சினையால் யானைக்கு சிகிச்சை அளிக்க தமிழக-கேரளா வனத்துறையினர் யோசனை செய்து வருவது சூழலியல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News