முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்தக் கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

புற நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து, இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.

Update: 2021-12-03 09:00 GMT

முதுகலை மருத்துவ மாணவர்கள் போராட்டம்

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வழக்கமாக ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் செப்டம்பா் மாதம் தான் நீட் தோ்வு நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கான இடஒதுக்கீடு மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளன. அதனால், மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெறவில்லை. நீட் தோ்வு எழுதிய 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்தாய்வுக்காக காத்திருக்கின்றனா்.

இந்நிலையில் சென்னை, மதுரை உள்ளிட்ட மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தற்போது கலந்தாய்வை நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கோவையிலும் அரசு மருத்துமனையில் பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் இரண்டாவது நாளாக இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். புற நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து, கோவை அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு முதுநிலை மருத்துவ மாணவர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News