காட்டு யானைகள் பாதுகாப்பாக இருக்க சிறப்பு யாகம்
நவக்கரை பகுதியில் ரயில் மோதி கர்ப்பிணி யானை உள்ளிட்ட மூன்று காட்டு யானைகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.;
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வட மாநிலத்தவரான காஷ் மனோத் என்பவர் யானைகளுக்காக சிறப்பு யாகம் நடத்தினார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நவக்கரை பகுதியில் ரயில் மோதி கர்ப்பிணி யானை உள்ளிட்ட மூன்று காட்டு யானைகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. எனவே யானைகள் இறக்காமல் இருப்பதற்காகவும், விபத்துகளில் சிக்காமல் இருக்கவும் அவர் யானைக்காக மா யாகம் என்ற சிறப்பு யாகத்தை நடத்தி உள்ளார். இதற்கு முன்பு ரயில்களால் உயிரிழந்த யானைகளின் புகைப்படங்களை வைத்து யாகம் நடத்தினார். மேலும் மத்திய அரசு உடனடியாக வனப்பகுதியில் செல்லும் ரயில்கள் குறைவான வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன உயிரினங்கள் எந்த விபத்திலும் சிக்காமல் உயிர் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த யாகம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.