தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

தமிழக அரசுக்கு நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

Update: 2022-02-04 08:45 GMT

 இந்திய மாணவர் சங்கம் போராட்டம்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு  விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகத்தின் அனைத்து அரசியல் இயக்கங்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் திமுக தலைமையிலான அரசு நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. கடந்த ஐந்து மாதங்களாக இம் மசோதா குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி விட்டு தற்போது தமிழக அரசுக்கு நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

தமிழக ஆளுநரின் இச்செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர்.  இதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் நடவடிக்கையை கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக தமிழக ஆளுநர் ரவியை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்தனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் தலைமையில் ஊர்வலமாக வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி  கைது செய்ய முயன்றனர்.

இதனைத்தொடர்ந்து தமிழக மாணவர்களுக்கு ஆளுநர் ரவி மிகப்பெரிய துரோகம் இழைத்ததாக குற்றம்சாட்டி  தமிழக ஆளுநர் ரவியின் உருவப்படத்தை கிழித்தெறிந்தனர். இதனால் சிறிது நேரம் ஆட்சியர. அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் மாரியப்பன், மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News