சீமானின் தவறான விமர்சனம் ஏற்கத்தக்கது அல்ல: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சீமான் தவறான வர்த்தைகளை பயன்படுத்தி தவறான ரீதியில் விமர்சனம் செய்வது ஏற்கத்தக்க வகையில் இல்லை என கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.;
கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாம் தமிழர் கட்சி சீமான் சமிப காலங்களாக காங்கிரஸ் கட்சியை ஏற்கத்தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகின்றார். தகுந்த வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்ய வேண்டும். சீமானின் கொள்கைகள் எடுப்படாத நிலையில், இதுபோன்ற விமர்சனங்களை செய்து வருகின்றார். அரசியல் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் வன்முறை பேசுவதால் விளம்பரம் தேடிகொள்கிறார்.
சென்னையில் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் இதனைப் பற்றி புகார்க் கொடுத்துள்ளோம். 7 தினங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது முழுக்க கட்சி சேர்ந்த புகாரே தவிர, தனிப்பட்ட புகார் இல்லை. விமர்சனங்கள் என்பது பொதுவானவையே. ஆனால் சீமான் தவறான வர்த்தைகளை பயன்படுத்தி தவறான ரீதியில் விமர்சனம் செய்வது ஏற்கத்தக்க வகையில் இல்லை என்ற அவர், இது போன்ற சம்பவங்களை அரசாங்கம் தான் தடை செய்யவேண்டும் என்றார். இதற்கான சட்ட ரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறித்தினார்.