கோவை ரிங் ரோடு திட்டப்பணிக்கு தமிழக அரசு ரூ. 845 கோடி ஒதுக்கீடு
கோவை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முழுமையான ரிங் ரோடு திட்டத்திற்கு, ரூ. 845 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.;
கோப்பு படம்
கோவை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முழுமையான ரிங் ரோடு திட்டத்திற்கு, ரூ. 845 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த, 2010ம் ஆண்டில், தி.மு.க ஆட்சியின் போது, கோவைக்கு மேற்கு புறவழிச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தற்போது, இத்திட்டப்பணிகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
நகரின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை இணைக்கும் வகையில், மதுக்கரையில் துவங்கி, நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மொத்தம் 33 கி.மீ.,க்கு அமைக்கப்படுகிறது. இப்பணிகளுக்கு மாநில அரசு, ரூ.845 கோடியை ஒதுக்கியுள்ளது.
இதில், நிலம் கையகப்படுத்த ரூ. 320 கோடி பயன்படுத்தப்படும். அதன்படி, 306 பட்டா நிலங்கள், 50 ஏக்கர் அரசு நிலங்கள், இப்பணிக்காக கையகம் செய்யப்படும். கொரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களால், இப்பணிகள் மந்தகதியில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.